Categories
உலக செய்திகள்

போரிஸ்-மெர்க்கலின் முக்கிய சந்திப்பு …. எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை …. வெளியான தகவல் ….!!!

ஜெர்மனியில் பிரிட்டன் பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

பிரிட்டனுக்கு வருகை தந்துள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ,பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ,பிரிட்டன் இடையேயான பயணம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரிட்டனில் தற்போது டெல்டா வகை கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக அந்நாட்டு பயணிகள் அனுமதிக்கப்படுவதை எதிர்த்து ஏஞ்சலா மெர்க்கல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அத்துடன் பிரிட்டனிலிருந்து ஜெர்மனிக்கு வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர்கள் சந்திப்புக்கு முன்பாக  ஜெர்மனியில் பிரிட்டன் பயணிகளின் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா  தடுப்பூசி முழுமையாக போட்டுக் கொண்டவர்கள் அல்லது தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்படாமல் நாட்டுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

Categories

Tech |