Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொரிகடலை லட்டு… ஈஸியா செய்யலாம்..!!

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் நீங்கள் இந்த மாதிரி ஸ்டைல செய்து கொடுத்து அசத்துங்கள்..

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு                                   – 1/2 கப்
பொரிகடலை                              – 1/2 கப்
தேங்காய் துருவல்                     – 1/2 கப்
நிலக்கடலை                                 – 1/2 கப்
வெல்லம்                                          – 3/4 கப்
உலர்ந்த திராட்சை பழங்கள் – 8
முந்திரி பருப்பு                              – 10
நெய்                                                    – 1/2 கப்
தண்ணீர்                                           – 1/4 கப்
ஏலக்காய்                                          –  5

செய்முறை:

முதலில் அடுப்பில் வாணலியை வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும், அதில் முந்திரி பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை பழங்கள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளுங்கள். இப்பொழுது அதே கடாயில் பொரி கடலை, நிலக்கடலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளுங்கள். வறுத்து வைத்திருப்பதை மிக்சியில் போட்டு ஏலக்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

அதற்கிடையே அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து அதில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடு படுத்த படுத்துங்கள். வெல்லும் முழுவதும் கரைந்து கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியான பதம் வரும் வரை சூடுபடுத்தவும். இப்போது அரைத்த கடலை, அரிசி மாவு போன்றவற்றை வெல்லத்துடன் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். இதை ஒரு தட்டில் கொட்டி ஆற விடுங்கள். பின்னர் சிறு சிறு உருண்டையாக புடித்து வைத்து குழந்தைகளுக்கு பரிமாறுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

 

Categories

Tech |