போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் அடித்து விரட்டும் காட்சியானது சமூக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றுக்கான கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் அந்நகரில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான Bahnhof-ல் இருந்து Bundesgasse வரை போராட்டம் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த போராட்டத்தை கலைப்பதற்காக போலீஸ் தடைகளை விதித்துள்ளனர்.
https://twitter.com/i/status/1446467265759678476
ஆனால் அதனையும் மக்கள் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களின் மீது தண்ணீர் பாய்ச்சும் வாகனங்கள் மற்றும் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வீதிகளில் போலீசார் சரமாரியாக தாக்கும் காட்சிகளானது சமூக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.