மியான்மரில் சென்ற 43 நாட்களில் ராணுவத்தினருக்கு எதிராக அறவழியில் போராடிய 138 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடப்பு ஆண்டின் பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டு ராணுவ ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் மியான்மர் மக்கள் எங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டாம் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை ஒடுக்குவதற்காக ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தி மக்களை கொன்று குவிக்கின்றனர் .
இந்நிலையில் சென்ற 43 நாட்களில் அறவழியில் போராடிய 138 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஐநா பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது, ” ராணுவத்தினருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் 138 பேர் கொல்லப்பட்டுள்ளனர். திங்கட் கிழமை மட்டும் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போராடும் மக்கள் அறவழியில் தங்கள் உரிமைகளுக்காக தான் போராட்டம் நடத்தி வருகின்றனர் .
ஆனால் அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை கண்டிக்கத்தக்கது. அந்நாட்டு மக்களுக்கு ஆதரவாக நின்று அவர்களது ஜனநாயக விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்காக சர்வதேச சமூகங்கள் ஒன்றிணைய வேண்டும். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கை கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் ” என்று அவர் கூறியுள்ளார்.