Categories
உலக செய்திகள்

இனி கொரோனா சான்றிதழ் கட்டாயம்…. புதிய கட்டுப்பாடு அறிவித்த அரசாங்கம்…. பொங்கி எழுந்த பொதுமக்கள்….!!

பிரான்ஸ் அரசாங்கம் அடுத்த வாரம் அமலுக்கு வரவுள்ள கொரோனா குறித்த புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நூற்றுக்கும் மேலான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகராக பாரிஸ் நகரம் திகழ்கிறது. இதனையடுத்து உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் பல கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அதன்படி பிரான்ஸ் போன்ற பல ஐரோப்பிய நாடுகள் கொரோனா குறித்த புதுவித சான்றிதழ் திட்டத்தை தங்கள் நாட்டிற்குள் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் கொரோனா குறித்த புதிய கட்டுப்பாடு ஒன்று அடுத்த வாரத்திலிருந்து அமலுக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது வணிக வளாகங்கள், ரயில்கள் மற்றும் விமானங்களில் பயணம் செய்ய நினைக்கும் நபர்கள் ஹெல்த் பாஸ் எனப்படும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்பதாகும்.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு மக்கள் கொரோனா குறித்த புது வித கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தலைநகரான பாரிஸில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

Categories

Tech |