Categories
உலக செய்திகள்

‘பல ரகசியங்கள் உள்ளது’…. கடலில் விழுந்த போர் விமானம்…. தேடும் பணிகள் தீவிரம்….!!

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான போர் விமானத்தை பிரிட்டன் படைகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து  பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதில் “பிரிட்டனின் குயீன் எலிசபெத் விமானம் தாங்கி கப்பலில் இருந்து F-35 போர் விமானமானது வழக்கம் போல பயிற்சிக்காக மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனை அடுத்து விமானமானது கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அதிலும் இந்த விமானத்தை இயக்கிய விமானி பாராசூட் மூலம் குதித்து விமானம் தாங்கி கப்பலை பாதுகாப்பாக வந்து சேர்ந்தடைந்தார். இவ்விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார். இந்த அதிநவீன போர் விமானமானது ரேடாரின் கண்களுக்கு புலப்படாமல் பல்வேறு பணிகளை செய்யும் திறன் மிக்கது.

முக்கியமாக எதிரிகளின் எல்லைகளில் பறக்கும் விமானத்தை ரகசியமாக கண்காணிப்பதற்காக இந்த விமானத்தில் ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ தொழில்நுட்பங்களும் இந்த விமானத்தில் உள்ளன.ஒருவேளை இந்த விமானத்தை ரஷ்யா கைப்பற்றினால் அதிலுள்ள பல ரகசிய ராணுவ தொழில்நுட்பங்கள் தெரிந்துவிடும்.

இது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இன்னலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதிலும் எதிரிகளின் எல்லைக்குள் ரகசியமாக நுழையும் திறனும் உளவுத் தகவல்களை சேகரிக்கவும் தாக்குதல் தரவுகளை துல்லியமாக படமெடுத்து அனுப்பவும் இந்த விமானமானது பயன்படுத்தப்படுகிறது.

மேலும் அமெரிக்காவின் லாக்கீன் மார்ட்டின் என்னும்  நிறுவனத்தால் இந்த விமானமானது தயாரிக்கப்படுகிறது. இது ஈராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த விமானத்தை தேடும் பணியில் பிரிட்டன் படைகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Categories

Tech |