ஹூவாய் நிறுவனம் ஹுவாய் Y9 பிரைம் 2019 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் தனது Y9 பிரைம் 2019 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் எமரால்டு கிரீன் மற்றும் சஃபையர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் கிரின் 710 12 NM பிராசஸர், 4 GB ரேம், ஜி.பி.யு. டர்போ 3.0, 16 MP. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 8 MP அல்ட்ரா-வைடு சென்சார், 2 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் இரு கேமரக்களிலும் ஸ்டூடியோ தர லைட்டிங் எஃபெக்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

:sharpen(1,0,false):quality(100)/product/26/352791/1.jpg?1429)
6.59 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் HD+ 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் கிரின் 710 12 NM பிராசஸர்
– ARM மாலி-G51 MP4 GPU
– 4 GB. ரேம், 128 GB. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9 PIE மற்றும் EMUI 9.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 16 MP பிரைமரி கேமரா, f/1.8
– 8 MP அல்ட்ரா-வைடு சென்சார், f/2.4
– 2 MP டெப்த் கேமரா, f/2.4
– 16 MP. பாப்-அப் செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார்
– டூயல் 4G வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 mah. பேட்டரி