நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 8 ஆயிரத்து 754 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு கடைசியாக இந்த பணி நடைபெற்றது. இதையடுத்து இந்த ஆண்டில் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், 8 ஆயிரத்து 754 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.