பிரியங்கா சோப்ரா கிரிக்கெட் அணி போன்று குழந்தைகளை பெற்று கொள்ள ஆசைபடுவதாக கூறியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது சிறியவனான நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனால் சமூக வலைத்தளத்தில் இவரைப் பற்றிய கருத்துகள் குவிந்து வந்தன. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர்களின் வயது வித்தியாசம் குறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது, பிரியங்கா சோப்ரா எனக்கும் நிக்கிற்கும் இடையில் எந்தவித பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்திய கலாச்சாரத்தை புரிந்துகொண்ட நிக்கிற்கு வயது வித்தியாசமானது ஒரு பிரச்சினையே இல்லை என கூறியுள்ளார். மேலும் சாதாரண ஜோடிகளை போல நாங்கள் புரிந்து வாழ்கிறோம் என கூறியதோடு, தான் குழந்தை பெற்றுக் கொள்ள ஆவலாக இருப்பதாகவும், ஒரு கிரிக்கெட் அணி போன்று ஒரு டஜன் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.