தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தா, தனக்கு ஹிந்தி படத்தில் நடிக்க விருப்பமில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் அனுஷ்கா ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டார். ஏனென்றால் தனக்கு தென்னிந்தியத் திரைப்பட நடிகை என்ற பெயரே போதும் என்று நடித்து வருகிறார். அதைபோல் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் சமந்தாவும் தன்னை தேடிவந்த ஹிந்தி திரைப்பட வாய்ப்பை மறுத்துவிட்டார். சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘யு-டர்ன்’ என்னும் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாக கூறினார்கள்.
அதனால் சமந்தாவை ஹிந்தியிலும் நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு சமந்தா தான் அதே வேடத்தில் நடிக்க மீண்டும் விரும்பவில்லை என்று தவிர்த்துவிட்டார். அதனால் சமந்தாவுக்கு பதிலாக நடிகை டாப்சியை நடிக்க வைப்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுவருகிறது.