‘வேதாளம்’ தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியான படம் ”வேதாளம்”. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.
இந்த படத்தில் அஜீத் கதாபாத்திரமாக சிரஞ்சீவி நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். ”போலோ சங்கர்” என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 11ஆம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.