Categories
உலக செய்திகள்

விரைவில் குணமடையும் போப் பிரான்சிஸ்… உலக தலைவர்கள் வாழ்த்து… வாடிகன் வெளியிட்ட தகவல்..!!

போப் பிரான்சிஸ் அறுவை சிகிச்சைக்குப்பின் தற்போது குணமடைந்து வருவதாக வாடிகன் செய்தி தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ் ( 84 ) கடந்த 4-ந்தேதி சிகிச்சைக்காக இத்தாலியில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் அவருக்கு செய்யப்பட்ட மூன்று மணி நேர அறுவை சிகிச்சையில் அவருடைய பெருங்குடலின் இடதுபாகம் நீக்கப்பட்டதாகவும், தற்போது உடல் நலத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டு வருவதாக வாடிகன் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் போப் பிரான்சிஸ் குடல் அறுவை சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வருவதாகவும், அவருடைய உடல்நிலை வழக்கமான முறையில் உள்ளதால் அவரால் தற்போது உணவு எடுத்து கொள்ள முடிகிறது என்றும் வாடிகன் செய்தி தொடர்பாளர் மாத்தியோ புரூனி நேற்று கூறியுள்ளார். இதற்கிடையே உலக தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் வாடிகன் செய்தி தொடர்பாளர் உலக தலைவர்களுக்கு போப் பிரான்சிஸ் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்ததாக கூறியுள்ளார்.

Categories

Tech |