Categories
உலக செய்திகள்

பாப் பாடகியின் முடிவு…. தற்காப்புக்கலை திரைப்படம் எடுக்க திட்டம்…. நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் வெளியீடு….!!

உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி ஹாலிவுட் திரைப்படத்தை இயக்கப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற ‘பாப்’ இசை பாடகியான பிரிட்னி  ஸ்பியர்ஸ்  அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவர் சமீபத்தில் தான் தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். இவரின் இசை வாழ்க்கை இதனால் நிலைகுலைந்து போயுள்ளது. இந்த நிலையில் அவர் ஒரு படத்தை இயக்கப் போவதாக முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நான் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தை இயக்குவதை பற்றி திட்டமிட்டு உள்ளேன். இந்த படம் டரான்டினோவின்  தற்காப்பு கலை திரைப்படமான ‘கில்பில்’  போன்று இருக்கும்.

இந்த படப்பிடிப்பில் உள்ள அனைத்து சவால்களும் எனக்கு தெரியும். நான் என் வாழ்க்கையின் பாதி நாட்கள் கூண்டில் அடைக்கப்பட்ட விலங்காக இருந்தேன். அதனால் தான் விடுவிக்க இப்படத்தை தேர்வு செய்துள்ளேன். நானே எனக்கு அலங்காரம் செய்து நானே இந்த படத்திற்கு இசை அமைப்பேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஒரு மணி நேரம் ‘பிரேவ் நியூ கேர்ள் என்ற பாடலுடன் இரண்டு வித்தியாசமான ஆடைகளில் அவர் நடனமாடும் வீடியோவும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோவை எடுப்பதற்காக இரண்டு மணி நேரம் செலவிடபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |