Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு பிடித்த “தேங்காய் பூரி”

தேவையான பொருட்கள் 

ரவை                                   –  1/2 கப்

கோதுமை மாவு             –  2 கப்

தேங்காய் துருவல்       –  1 கப்

எண்ணெய்                       –  தேவைக்கேற்ப

சர்க்கரை                           –  1 கப்

 

செய்முறை 

முதலில் தேங்காய்த்துருவல் சர்க்கரை மற்றும் ரவை மூன்றையும் நன்றாக பிசைந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

கோதுமை மாவை தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

உருட்டி வைத்துள்ள உருண்டைகளில் குழி போல் செய்து ஊற வைத்துள்ள தேங்காய் கலவையை குழியினுள் வைத்து மூடி விடவும்.

அந்த உருண்டையை பூரியாக மாற்றி பொரிக்க தேவையான எண்ணெயை கடாயில் வைத்து எண்ணெய் சூடானதும் பூரியை போட்டு பொரித்து எடுக்கவும்.

தேங்காய் பூரி தயார்

Categories

Tech |