செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, திமுக சர்க்கஸ் கம்பெனி மாதிரி. அதில் ஸ்டாலின் அவர்கள் பாவம் நல்ல மனிதர், என்ன சுயமாக பேச மாட்டார், எழுதிக் கொடுத்தால் பேசுவார். அது ஒன்றும் பெரிய தப்பு இல்லையே. ஏனென்றால் ஏற்கனவே ராஜாஜி சொல்லியிருக்கார்.. திறமை இல்லாதவர்களுக்கும், அயோக்கியர்களுக்கும், இரண்டு பேரில் யாரையோ தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், திறமை இல்லாதவர்களை தேர்ந்தெடுத்து,
அவர் பக்கத்துல திறமையானவர்களை அருகில் வைத்துக் கொள்ளலாம், அயோக்கியர்கள் வேண்டாம் என்று சொன்னார். அதனால் ஸ்டாலின் பாவம், அவருக்கு திறமை இல்லை. எழுதிக் கொடுக்கவில்லை என்றால் அவருக்கு பேச தெரியாது, என்பதெல்லாம் தகுதி இல்லை என்று நான் நினைக்கவில்லை.ஸ்டாலின் நல்லவர். அதனால் அவர் முதலமைச்சராக இருப்பதில் எனக்கு சந்தோசம் தான். ஆனால் உங்களையும்,
கோபாலபுரம் குடும்பத்தையும் சேர்த்து ஆ. ராசா இப்படி சொல்லி இருக்கிறார், அதனால் இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? ஓ சொல்லுறீங்களா ? ஓஹோ சொல்லுறீங்களா ? என்று இந்துக்கள் கேட்கிறார்கள் ஸ்டாலினை பார்த்து. ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் ஆ. ராசா பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆ.ராசா மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கணும்.
பாவம் டிஜிபி.. அவரும் நல்லவர்தான், ஆனால் அவருக்கு இருக்கின்ற அதிகாரம், சைக்கிளில் போகலாம், செல்பி எடுக்கலாம், சமூக வலைதளத்தில் பதிவு செய்யலாம். அதற்கு மேல் அவராலும் ஒன்னும் செய்ய முடியாது. அந்த நிலையில் தான் அவர் இருக்கிறார். காவல்துறை ஆ. ராசாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்… குண்டா சட்டத்தில் அவரை கைது செய்யவில்லை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.