ஏய்.. முதுகெலும்பு இல்லாதவர்கள் பேசக்கூடாது, உட்காரு என்று தேனி மக்களவை உறுப்பினரை TR பாலு சீண்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர்.
அதன் பின் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும்போது அ.தி.மு.க மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குறுக்கிட்டுப் பேச முயன்றார். அப்போது டி.ஆர்.பாலு, “ஏய்.. முதுகெலும்பு இல்லாதவர்கள் பேசக்கூடாது; உட்காரு; நாடாளுமன்றம் முதுகெலும்பு உடையவர்களால் நிரம்பியது. உங்களைப் போன்றவர்களுக்கானது கிடையாது” எனக் கூறினார். இதற்க்கு எதிர் கட்சியினர் சிரித்துக் கொண்டு மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.