Categories
தேசிய செய்திகள்

தலையில் பலத்த காயம்…. ரூ4,000 கொடுத்தால் ஆம்புலன்ஸ் வரும்….. ஏழை விவசாயியிடம் விலை பேசிய ஆம்புலன்ஸ் டிரைவர்….!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த காயமடைந்த ஏழை விவசாயி ஒருவரிடம்  ஆம்புலன்ஸ் டிரைவர் அதிக தொகை கேட்டு விலை பேசியது பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தை அடுத்த கட்டக்கல்  கிராம பகுதியை சேர்ந்த அமலுராம்  என்ற விவசாயி, மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று அவர் மீது மோதியதில், கண்களிலும், தலையிலும்  பலத்த காயம் அடைந்தார். பின் அவர் சிகிச்சைக்காக கான்கர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காயம் பலமாக இருப்பதால், உடனடியாக ராய்ப்பூர் அரச மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று அறிவுறுத்தினார்.

ஆனால் ராய்ப்பூர் மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்க்கும் அளவிற்கு வசதி இல்லாததால், சொந்த கிராமத்திற்கு திரும்பி செல்ல விவசாயியும் அவருடன் வந்தவர்களும் முடிவுசெய்தனர். இதைத்தொடர்ந்து, மீண்டும் சொந்த கிராமத்திற்கு செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தி தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் விவசாயி  கோரிக்கை விடுத்தார். அதன்படி, வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் முதலாக இலவசமாக அழைத்துச் செல்ல ஒப்புக் கொண்டார். அதன் பின்,

செவ்வாய் கிழமை என்பதால், ஆம்புலன்ஸ் இயங்காது என்றும், ஆம்புலன்ஸ் வர வேண்டுமெனில், ரூ4000 கொடுக்க வேண்டுமெனவும் வற்புறுத்தியுள்ளார். ரூ4000 கொடுக்க பணம் இல்லாத காரணத்தினால், விவசாயியும்  அவருடன் வந்தவர்களும் நடந்தே  கிராமத்திற்கு செல்ல திட்டமிட்டு, கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக 70 கிலோமீட்டர் ஆங்காங்கே அமர்ந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதனை அறிந்த சில மனிதநேயம் உள்ளவர்கள், அவர்களுக்கு கார் ஒன்றை வாடகைக்குப் ஏற்பாடு செய்து சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். பின் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமலுராமுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். 

Categories

Tech |