கேரளாவில் மசூதி ஒன்றில் ஏழை இந்து ஜோடிக்கு அவர்களது மத முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.
கேரளா மாநிலத்தில் ஆலப்புழா பகுதியை சேர்ந்த ஏழைப் பெண்மணி ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு பணம் திரட்ட முடியாமல் திண்டாடி உள்ளார். இது குறித்து அறிந்த சிறுவாணி முஸ்லிம் ஜமாத் மசூதி நிர்வாகம் அந்த ஏழைப் பெண்ணின் திருமண செலவை ஏற்று நடத்த ஒப்புக்கொண்டது.
மேலும் மசூதி வளாகத்திலேயே அரங்கம் அமைத்து இந்துமத முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க திருமணத்தை நடத்தியதோடு, கேரள வழக்கப்படி திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தடபுடலான சைவ விருந்து படைத்து மசூதி நிர்வாகம். இந்நிகழ்வு கேரளா மக்களிடம் மட்டுமில்லாமல் அனைத்து மாநில மக்களிடையேயும் பாராட்டை பெற்றுள்ளது.