அரைத்துவிட்ட பூண்டு ரசம்
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு – 1 டீஸ்பூன்
தனியா – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பூண்டு பல் – 5
புளித் தண்ணீர் – 1 கப்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், பூண்டு பல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் புளித் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்து புளி வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு , எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்தால் சுவையான அரைத்துவிட்ட பூண்டு ரசம் தயார் !!!