பிரபல நடிகை பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் வெளியான சேவல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதைத்தொடர்ந்து பிற மொழிகளில் நடித்து வந்த அவர் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அவற்குப் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
கடைசியாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா படத்தில் பூனம் நடித்திருந்தார். ஆகையால் பட வாய்ப்பிற்காக அவ்வப்போது தனது கவர்ச்சியான படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.