Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படத்தின்…. நடிகருக்கு ஏற்பட்ட விபத்து…. மருத்துவமனையில் அனுமதி….!!

பொன்னியின் செல்வன் படத்தின் நடிகருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக மருத்துவர்கள் அவருக்கு அறுவைச்சிகிச்சை செய்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் அவர்கள் தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார்.  இந்த திரைப்படத்தில் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பானது தாய்லாந்து ஹைதராபாத், மத்தியபிரதேசம், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக படத்தில் உள்ள நடிகர்கள் ஒவ்வொருவராக தங்களது காட்சிகளை நடித்து முடித்து வருகின்றனர்.  இந்த நிலையில் நடிகர் கார்த்தி அண்மையில் தான் அவரின் காட்சிகளை நடித்து முடித்துள்ளார்.

மேலும்  கார்த்தியே அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். தற்பொழுது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த பாபு ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அதிலும் அவருக்கு இன்று அதிகாலை மூன்று மணியளவில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை  செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவர் 3 முதல் 4 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |