“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் நன்றி விழா இன்று நடைபெற்றுள்ளது.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-தேதி வெளியானது. இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தற்போது வரை ரூ. 500 கோடிக்கும் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரேம் தளத்தில் கடந்த அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் 2- பாகம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வரயுள்ளதாக வெளியாகியது. இதற்கிடையில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் நன்றி விழா இன்று நடைபெற்றுள்ளது. இதில் லைகா நிறுவனம், இயக்குனர் மணிரத்தினம் மற்றும் படக்குழுவினர் சார்பில் நன்றி விருது வழங்கப்பட்டுள்ளது.