Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன்” கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்…..? பிரபல பட அதிபர் ஆவேசம்….!!!!

மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் 350 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை பற்றி பிரபல பட அதிபர் கேயார் பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, விக்ரம் திரைப்படத்தை போன்று பொன்னியின் செல்வன் திரைப்படமும் நல்ல லாபத்தை பெற்று வருகிறது. விக்ரம் படத்தை விட பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நல்ல பிரமோஷன் இருந்ததால் தான் படம் பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கிறது.

அதோடு பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அதற்கு மிகப்பெரிய வெற்றி காத்திருந்தது. அதற்கு 50% அமரர் கல்கி தான் காரணம். அதன் பிறகு 20% படத்தின் வெற்றிக்கு காரணம் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த். இவர்கள் 2 பேரும் பட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு புத்தகத்தைப் பற்றி சிறப்பாக பேசியது தான் படத்தின் வெற்றிக்கு மற்றொரு சிறப்பான காரணமாக பார்க்கப்படுகிறது. புத்தகத்தை படிக்காதவர்களுக்கு கூட ரஜினி மற்றும் கமலின் பேச்சு ஒரு ஆர்வத்தை கூட்டியது. அதன் பிறகு சமூக வலைதளங்களிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நல்ல விளம்பரங்கள் கொடுக்கப்பட்டது.

இந்துக்களுக்கு ராமாயணம் எப்படி இருக்கிறதோ அதேபோன்று தமிழர்களுக்கு இனி பொன்னியின் செல்வன் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் அமரர் கல்கி மட்டும்தான். அவரின் 5.5 ஆண்டு கால உழைப்பு மிகப்பெரியது. இந்த புத்தகத்தை எதற்காக படிக்காமல் போனோம் என்று தற்போது அனைவருமே வருத்தப்படுகிறார்கள். பலருக்கும் கிடைக்காத ஒரு விஷயத்தை மணிரத்தினம் தன்னுடைய கையில் எடுத்து சாதித்து காட்டி இருக்கிறார். லைகா நிறுவனத்துக்கும் என்னுடைய பாராட்டுக்கள். இதனையடுத்து படத்தின் வெற்றிக்கான 10% காரணம் விடுமுறைகள் மற்றும் 20% காரணம் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை 3 பாகங்களாக இயக்கி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை 2 பாகங்களாக இயக்கும்போது கதாபாத்திரத்தில் தொய்வு ஏற்படுகிறது. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் கல்கி மட்டும் தான். இப்படிப்பட்டவருக்கு  படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக அவருடைய புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. எனவே பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் ஆவது அமரர் கல்கியின் புகைப்படத்திற்கு முதலில் மரியாதை செலுத்தி விட்டு படத்தை ஆரம்பியுங்கள் என்று கூறியுள்ளார். அதோடு கல்கியின் குடும்பத்தினருக்கும் மணிரத்தினம் மற்றும் லைகா நிறுவனம் சன்மானம் கொடுத்து கௌரவப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |