Categories
தேசிய செய்திகள்

பொங்கலை முன்னிட்டு செம மகிழ்ச்சி அறிவிப்பு..!- Wow..!!

இண்டிகோ விமான நிறுவனம் பொங்கலை முன்னிட்டு விமான கட்டணத்தை அதிரடியாக குறைந்துள்ளது.

இண்டிகோ விமானம் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17ஆம் தேதி வரை ரூபாய் ரூ. 877 ரூபாய்க்கு டிக்கெட் சலுகையை கொடுத்துள்ளது. இண்டிகோவின் சமீபத்திய விற்பனை சலுகை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான பயணங்களுக்கு செல்லுபடியாகும். இண்டஸ்லேண்ட் வங்கி அட்டையைப் பயன்படுத்தி சலுகைக் காலத்தில் இண்டிகோ விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, இண்டஸ்இண்ட் வங்கி அதிகபட்சமாக ரூ.5,000 வரை 12 சதவீத கேஷ்பேக்கை வழங்குகிறது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

இண்டிகோ விமானங்களை முன்பதிவு செய்யும்போது குறைந்தபட்சம் ரூ.3,000 முன்பதிவு செய்யப்படும் போது இந்த சலுகை செல்லுபடியாகும். இச்சலுகை ஜனவரி 17ஆம் தேதி கிடைக்கும். இந்த சலுகையில் புக் செய்துவிட்டு, டிக்கெட்டை ரத்து செய்தால் ரூபாய் 500 கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |