பொங்கல் பரிசு பணம் வேறு எங்கேயும் போகாது டாஸ்மாக் கடைக்கு வந்து விடும் என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மக்களுக்கு அரசு கொடுக்கும் இந்த பொங்கல் பணம் எங்கேயும் போகாது டாஸ்மாக் மூலம் திரும்ப வந்துவிடும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். மேலும் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதாமல் மருத்துவராக வேண்டும் என்பதற்காகவே முதல்வர் பழனிசாமி 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.