Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொங்கலோ பொங்கல்… தூத்துக்குடியில் தயாராகும் பனை ஓலைகள்…!!

பொங்கல் திருநாளிற்காக தூத்துக்குடி பகுதிகளில் பனை ஓலைகளை விவசாயிகள் காய வைத்து தயார் செய்கின்றனர்.

பொங்கல் திருநாளின் போது பொதுமக்கள் வீடுகளின் முன் பொங்கல் பானைகளை வைத்து பொங்கலிட்டு கொண்டாடுவது வழக்கம். பொங்கல் இடுவதற்காக பனை ஓலைகளையே மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். தற்போது இதனால் பனை ஓலைகள் விற்பனைக்கு தயாராகின்றன. தூத்துக்குடி காளாங்கரை போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் பொங்களுக்கு தேவையான பனை ஓலைகளை வெட்டி அவைகளை காய வைக்கின்றனர்.

பொங்களுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஓலைகள் காய்ந்து பண்டிகைக்கு தயாராகி வருகின்றன. காய்ந்தவுடன் அதனை விற்பனைக்கு கொண்டு செல்லும் பணிகளை விவசாயிகள் செய்கிறார்கள். இதுபோலவே விளாத்திகுளம், திருச்செந்தூர், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், உடன்குடி, சாத்தான்குளம் ஆகிய பகுதிகளிலும் பனை ஓலைகள் பொங்கலுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.

Categories

Tech |