Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையன்று…. பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்…!!

பொங்கல் பண்டிகையன்று காலை பொங்கல் வைக்க உகந்த நேரம் என்னவென்று பார்க்கலாம்.

வருடம் தோறும் தை மாதம் முதல் நாள் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையானது சூரிய பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று மூன்று நாளும் கொண்டாடுவது வழக்கம். இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக முதல்நாள் சூரியனுக்கு பொங்கல் பானை வைத்து பொங்கல் கொண்டாடப்படுகிறது. புது பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து நன்றி தெரிவிப்பார்கள். இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் தினத்தன்று மாடுகளை அலங்கரித்து அதற்கு பொங்கல் வைத்து உணவு படைத்து சாமி குடும்பிடுவார்கள்.

மூன்றாம் நாள் உறவுகளை கண்டு மகிழும் விதமாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த வருடம் ஜனவரி 14ம் தேதி வியாழக்கிழமை பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதேபோல் ஜனவரி 15ஆம் தேதி மாட்டு பொங்கல் திருநாள், மறுநாள்  காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை 1ஆம் நாள் ஜனவரி 10.30 – 12 மணி வரை பொங்கல் வைக்க உகந்த நேரம். எமகண்டம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், ராகு காலம் மதியம் 1 .30 – 3 மணி வரை இருக்கும். எனவே நல்ல நேரத்தில் பொங்கலிட்டு வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கட்டும்.

Categories

Tech |