Categories
பல்சுவை

குட்டி சுட்டீஸ் இருக்கும் வீட்டுல…… இப்படி தான் பொங்கல் வைக்கணும்….. இந்த முறையை பாலோ பண்ணுங்க….!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது  வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் அனைவரும் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் பாரம்பரிய முறைப்படி இத்திருநாளை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் திருநாள் வித்தியாசமாக கொண்டாடப்படும். அந்த வகையில்,

சிறு வீட்டுப் பொங்கல் என்னும் முறை நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வழக்கத்தில் உள்ள நடைமுறையாகும். ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து தாங்களாகவே வீடுகள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் அருகில் பொங்கல் வைத்து படையலிட்டு சாமி கும்பிட்டு மகிழ்வார்கள். தற்போது ஒரு சில வீடுகளில் மட்டுமே இந்த சிறு வீட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 

Categories

Tech |