Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

பொள்ளாச்சி கொடூரம்…… தொடரும் மாணவர்கள் போராட்டம் ……!!

பொள்ளாட்சியில் இன்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சியில் ஒரு பாலியல் கும்பல்  கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . மேலும் இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் கோபத்தையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர் இதனால் இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது .

இந்நிலையில் இன்று  கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடாத்தினர் . நேற்று மதியத்திலிருந்தே நடைபெறும் இந்த போராட்டம் இன்றும் தொடர்கின்றது . இதில் அவர்கள் பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் போராட்டம் நடத்தியதற்காக போலீசார்  167 சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் , போராட்டம் நடத்தும் மாணவர்களை மிரட்டும் கல்லூரி முதல்வரை இடமாற்றம் செய்யக் கோரியும்  மாணவர்கள் முழக்கங்கமிட்டனர்.

Categories

Tech |