பொள்ளாச்சி பாலியல் வழக்கை அவசரம் அவரசரமாக CBI விசாரணைக்கு மாற்றியதில் உள்நோக்கம் இருக்குமோ என்று ஐயம் ஏற்படுவதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது .
இந்த கொடூர குற்றவாளிகள் 4 பேரின் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் , பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் . இதையடுத்து இந்த வழக்கு C.B.I வசம் ஒப்படைக்கப்படுவதாக தமிழக அரசு அரசனை வெளியிட்டது . இது குறித்து திருமாவளவன் உடனே CBI விசாரணைக்கு மாற்றியது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செய்தியாளர்களை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வக்கிரம் நாட்டையே அதிர வைத்திருக்கிறது . தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது . இந்த பாலியல் வக்கிரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் . நான்கு பேரை கைது செய்து அவசரம் அவசரமாக அவர்களை குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தி , காலையில் சிபிசிஐடி விசாரணை என்று அறிவித்த தமிழக அரசு மாலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது . மக்கள் கோரிக்கை விடுக்கும் போதெல்லாம் சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் வழங்காத போது தற்போது C.B.I விசாரணைக்கு உத்தரவிட்டதில் உள்நோக்கு இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தி இருந்தாலும் உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடைபெறும் என்கின்ற அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.