நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குபதிவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் வாரிசுகள் வேட்பாளராக களமிறங்கினர்.
இந்தியாவின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதையடுத்து கடந்த 1 மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகளை அமுல்படுத்தி தேர்தல் நடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது தேர்தல் ஆணையம். இந்நிலையில் முதல் கட்ட வாக்குபதிவாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது.
நேற்று நடந்த முதல்கட்ட வாக்குபதிவில் பல்வேறு நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் வேட்பாளர்களாக களமிறங்கினர். அந்த வகையில் ,
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கே.கவிதா நிஜாமாபாத் நாடாளுமன்ற தொகுதில் டி.ஆர்.எஸ் கட்சி சார்பிலும் ,
அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண்கோகாய் மகன் கவுரவ் கோகாய் கலியபார் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பிலும் ,
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் பீகாரின் ஜாமுய் நாடாளுமன்ற தொகுதியில் லோக்ஜனசக்தி சார்பிலும் ,
முன்னாள் மத்திய அமைச்சர் கே.சி.கந்தூரி மகன் மணிஷ் கந்தூரி உத்தரகாண்ட் கரிவால் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பிலும் முக்கிய வேட்பாளர்களாக இடம் பிடித்துள்ளனர்.