அமெரிக்க நாட்டில் ஒன்பது வருடங்களுக்கு பிறகு மீண்டும் போலியோ நோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.
உலகில் கடந்த 1948 ஆம் வருடத்தில் இருந்து 1955 ஆம் வருடம் வரை போலியோ பாதிப்பு கடுமையாக பரவி உயிர்பலிகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு, போலியோ நோயை தடுக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த நோய் அதிகளவில் பரவவில்லை. எனினும், தற்போது வரை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கு போலியோ நோய் பரவிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் கடந்த 1979 ஆம் வருடத்துடன் போலியோ மொத்தமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்ற அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு, 2013 ஆம் வருடத்தில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற ஏழு மாத குழந்தைக்கு போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டது.
அதன்பின், அங்கு போலியோ பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில், மீண்டும் அமெரிக்க நாட்டில் ஒரு இளம் பெண்ணிற்கு போலியோ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அவர், வேறு எந்த நாட்டிற்காவது சென்று வந்தாரா? என்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.