திருநெல்வேலியில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதால் 1 ½ வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்த்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தருவை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் கயல்விழி. இவருக்கு ஒன்றரை வயது ஆகிறது. இந்நிலையில் கயல்விழிக்கு நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து ஆனது அவர்களது ஊரில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வைத்து வழங்கப்பட்டது. ஏற்கனவே கயல்விழிக்கு சளி இருந்ததால் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டதும்,
மேலும் சளி முற்றி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழக்க கதறியழுத பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அதில் போலியோ சொட்டு மருந்து கொடுத்ததால்தான் குழந்தை இறந்ததாகவும், குழந்தை இறந்ததற்கான உரிய காரணத்தை கண்டறிந்து துறை ரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர். பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது விசாரணையில் காவல்துறை அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அதிகாரிகளும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.