Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணின் மர்மமான மரணம்… என் மகளின் சாவுக்கு இவர்தான் காரணம்… போலீஸ்காரர் மீது புகாரளித்த பெண்…!!

திருமணமாகி ஒன்றரை வருடமே ஆன போலீஸ்காரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒட்டங்காடு பகுதியில் யோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ்காரராக கரூர் மாவட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாமி கிணறு பகுதியில் வசிக்கும் சத்தியபாமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்ததால் சத்யபாமாவின் கணவர் யோகேஸ்வரன் தனது குழந்தையை பார்ப்பதற்காக கடந்த ஒரு வாரமாக விடுமுறையில் வந்து தனது மாமனார் வீட்டில் மனைவியுடன் தங்கி உள்ளார். இந்நிலையில் சத்யபாமாவின் பெற்றோர் விவசாய தோட்டத்திற்கு சென்ற சமயத்தில் யோகேஸ்வரன் சத்தியபாமா தம்பதியினர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது சத்யபாமா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த சமயத்தில் அங்கு வந்த யோகேஸ்வரனின் தந்தை பெருமாள், சத்யபாமா தூக்கிட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக சத்யபாமாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து வீட்டிற்கு விரைந்து வந்த அவரது பெற்றோர் சத்யபாமாவின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர். மேலும் சத்யபாமாவின் தாய் மஞ்சுளா என்பவர் மேச்சேரி காவல் நிலையத்தில் தனது மருமகன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது மருமகன் அடிக்கடி சத்யபாமாவுடன் தகராறு செய்து வந்ததாகவும், தனது மகளின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் யோகேஸ்வரனை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |