பெண் ஒருவரை சந்திக்க சென்ற போலீஸ் அதிகாரி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்காவில் காவல்துறை உயர் அதிகாரியான ஹென்றி ஜெமோ என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய நண்பரிடம் ஒரு பெண்ணுடன் தான் டேட்டிங் செல்லப் போவதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவருடைய நண்பர் அந்தப் பெண் யார் என்று கேட்க ஹென்றி அந்த ரகசியத்தை சாகும்வரை சொல்ல மாட்டேன் என்றுள்ளார். மேலும் நான் தங்கப் போகும் ஆடம்பர ஹோட்டலினுடைய உரிமையாளர்களான இங்கிலாந்தை சேர்ந்த கோடிஸ்வரருடைய மகன் மற்றும் அவருடைய மனைவியான ஜாஸ்மின் என்பவர் தனக்கு நண்பர்கள் என்றும் கூறியுள்ளார். அதன்பின் ஹென்றி படகில் ஜாஸ்மினுடன் அமர்ந்து மது அருந்தினார். அப்போது ஜாஸ்மின் ஹென்றிக்கு தோள் பட்டைகளில் மசாஜ் செய்துள்ளார்.
இதனையடுத்து கீழேயிருந்த அவருடைய துப்பாக்கியை ஜாஸ்மின் எடுத்து ஹென்றியிடம் கொடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் ஜாஸ்மினின் கை தவறுதலாக துப்பாக்கியில் பட்டதில் குண்டு பாய்ந்து ஹென்றியின் காதில் பின்புறமாக உள்ள தலையின் வழியாக சென்றிருக்கிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஜாஸ்மின் நடந்தவற்றை கூறியுள்ளார். இதற்கிடையே இரு நபர்களினுடைய குடும்பத்தினர்களும் இவர்களுக்கிடையே பாலியல் ரீதியான தொடர்பில்லை என்று கூறியுள்ளார்கள். இதனையடுத்து ஜாஸ்மின் மீது காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர் இந்த வழக்கிற்கு சுமார் 10,000 டாலர்கள் அபராதம் கொடுத்துவிட்டு சிறை தண்டனையிலிருந்து தப்பித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு ஒரு தீர்ப்பு கிடைத்தால் இது நீதிக்கு புறம்பானது என்றும், தங்கள் குடும்பத்தை இது மிகவும் வருத்தமடைய செய்யும் என்றும் ஹென்றியினுடைய சகோதரியான ஜெர்ரி கூறியுள்ளார்.