போலீஸ் சூப்பிரண்டு அவருடைய சொந்த செலவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக ஆக்சிஜன் செலுத்தும் கருவியை வழங்கியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 230 பேர் ஆக்சிஜன் வசதியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அவருடைய சொந்த செலவில் ஒரு லட்சம் மதிப்பிலான விரைவாக ஆக்ஸிஜன் செலுத்தும் கருவியை வழங்கியுள்ளார்.
இந்த கருவியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் திலிபன் பெற்றுக்கொண்டார். அப்போது டாக்டர் பிரபாகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் அவருடன் இருந்துள்ளனர். இவ்வாறாக தனது சொந்த செலவில் நோயாளிகளுக்கு உதவும் வண்ணம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் செய்த உதவியை அனைவரும் பாராட்டியுள்ளனர்.