சுவிட்சர்லாந்தில் இருக்கும் வாடிகனில் பாதுகாவலர்கள் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் இருக்கும் வாடிகனில் போப் ஆண்டவர் உரை நடந்தது. அதனைக் கேட்க அதிகமான மக்கள் அந்தப் பகுதிக்கு வந்திருந்தார்கள். அப்போது ஒரு வாகனம் மட்டும் காவல்துறையினரின் சோதனைச்சாவடியில் நிற்காமல் அதிவேகத்தில் சென்றிருக்கிறது. காவல்துறையினர் வாகனத்தை நிறுத்துமாறு கோரியும், அந்த வாகனம் நிற்கவில்லை.
தொடர்ந்து வேகமாக சென்று அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீது மோதியது. இதனால் பாதுகாவலர்கள் அந்த வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எனினும் வாகனத்திலிருந்து அந்த நபர் உடனடியாக தப்பி ஓடி விட்டார்.
காவல்துறையினர் அவரை பின்தொடர்ந்து சென்று பிடித்துவிட்டனர். அதன்பிறகு அந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அவர் அல்பேனிய நாட்டவர் என்றும் அவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருப்பதும் தெரியவந்திருக்கிறது.