பேரையூர் அருகே காரில் சென்ற கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இக்காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் போதை பொருளுக்கு அடிமையாகி கொண்டு வருகின்றனர். இதனால் சமூகம் சீர்கெட்ட நிலையை அடைந்து வருகிறது. இந்நிலையில் பச்சாபாளையம் அருகே ஒரு கும்பல் காரில் வந்த கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இதன்பின் எஸ்பி சுஜித் குமார் உத்தரவின் பேரில் காவல்துறையினர் அங்கு சோதனைக்கு சென்றனர் . பின்னர் , பேரூர் காவல் துறையினர் போதை மாத்திரை வழங்கும் கும்பலை காருடன் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இதனைத்தொடர்ந்து , காரை சோதனை செய்த காவல்துறையினர் சுமார் 220 போதை மாத்திரைகள் இருந்ததாக கூறினர் .
அதன்பின் காரில் இருந்த அனுப் ரகுமான், ஷேக் அப்துல் காதர் , திஜேஸ்வர் சபரி ஆகிய மூவரையம் காவல்துறையினர் கைதுசெய்தனர் . மேலும் கார் மற்றும் போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர் . அந்த மூவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .