தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜில் இமாம் என்பவரை பல இடங்களில் போலீசார் தேடி வருகின்றனர்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜில் இமாம். இவர் மீது அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூர், உ.பி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்நிலையங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காரணம் அஸ்ஸாம் மாநிலத்தை இந்தியாவை விட்டு தனியாக துண்டித்து தனிநாடாக்க வேண்டும் என ஷர்ஜில் இமாம் போராட்டம் நடத்தினார். இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் அவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. இதையடுத்து ஷர்ஜில் தலைமறைவாகியுள்ளார். இவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். இந்தநிலையில், அவர் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.