நடிகை சாக்ஷி அகர்வால் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு நன்றி கூறியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் தற்போது துறவி, அரண்மனை3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்ஷி அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் தற்போது போலீஸ் அதிகாரி ஒருவரை பாராட்டி பதிவு செய்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஜெமினி மேம்பாலத்தில் எனது கார் பழுதாகி நின்று கொண்டிருந்தபோது சரியான நேரத்தில் உதவி செய்த போலீஸ் அதிகாரி சிட்டிபாபுவுக்கு எனது நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.