கனடாவில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் சக பெண் காவலரிடம் அத்து மீறியதால் ஒரு வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
வான்கூவர் பகுதியில் வசிக்கும் ஜக்ராஜ் பேரர் என்ற காவல் துறை அதிகாரி, கடந்த 2019 ஆம் வருடத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். அப்போது ஹோட்டலில் வைத்து, ஜக்ராஜ் பேரர், தூங்கி கொண்டிருந்த சக பெண் காவலரை குளியலறைக்குள் தள்ளிவிட்டு தவறாக நடந்திருக்கிறார்.
இதனால், அந்த பெண் காவலரின் திருமண வாழ்க்கை பாதிப்படைந்தது. மேலும், அவர் உளவியல் ரீதியாகவும் பாதிப்புகளை சந்தித்தார். இது மட்டுமல்லாமல் இச்சம்பவம் தொடர்பில் உயரதிகாரிகள் அவருக்கு உதவவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜக்ராஜ் பேரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஒரு வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தின் போது ஜக்ராஜ் பேரர் அதிக அளவில் மது அருந்தியதால் தான் இந்த குற்றத்தை செய்திருக்கிறார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.