மணல் கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுக்காலனி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் மற்றும் ஜே.சி.பி எந்திரத்தை நிறுத்தி காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதனை அடுத்து அவர்கள் உரிய அனுமதியின்றி மணல் கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மணலுடன் டிராக்டர் மற்றும் ஜே.சி.பி எந்திரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் டிராக்டர் டிரைவரான பொன்னுச்சாமி மற்றும் ஜேசிபி எந்திரத்தின் டிரைவரான கார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.