கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்ட பொறியியல் கல்லுரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் (Hubli) கேஎல்இ(kle) பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் வெளி மாநிலத்திலிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதன்படி காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள், பாகிஸ்தானிற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து சில நாட்களுக்கு முன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அந்த 3 மாணவர்களையும் அம்மாநில போலீசார் கைது செய்தனர். மேலும் பல்கலைக்கழகம் சார்பிலும் அவர்கள் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 4 பிரிவுகளின் கீழ் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஹூப்ளி-தர்வாத் நகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/Bunny999_/status/1228675738301157376