இந்தநிலையில் சிறுமி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடனத்தை கற்றுக்கொள்வதற்கு சென்றார். ஆனால் நேற்று குடியரசு தினம் என்பதால் யாருக்குமே பயிற்சியளிக்கவில்லை. நடன பயிற்சி ஆசிரியையும் அந்தசமயம் வெளியில் சென்றிருந்தார். அப்போது வீட்டில் நடன பயிற்சி பள்ளி ஆசிரியையின் தந்தை சரவணன் மட்டுமே இருந்தார். 50 வயதுள்ள சரவணன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி வீட்டிற்குள் அழைத்தார். அதன்பின் சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகின்றது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சற்று நேரத்தில் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்து, பின் நேராக வீட்டிற்கு சென்று நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார். அதைதொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சற்றும் யோசிக்காமல் சரவணன் வீட்டிற்கு நேராக சென்றனர். ஆத்திரத்தில் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்கள் திருப்பூர் வடக்கு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் அவரது வீட்டிற்கு விரைந்து வந்தனர். உடனே அந்த கொடூரனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.