கீழக்கரை அருகே காசு வைத்து சூதாடிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இடிந்தகல் புதூரில் அமைந்திருக்கும் தென்னந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தபோது அவ்வழியாக ரோந்து சென்ற கீழக்கரை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் சூதாட்டத்தில் ஈடுபட்ட கீழக்கரையை சேர்ந்த முகைதீன் அடிமை, செல்வக்குமார், ராஜா, காஜா, ஆரிப், நவாஸ், இஸ்மாயில் ஆகிய 7 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 42,000 ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.