Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இனிமேல் வெளிய போவீங்களா… தீவிர கண்காணிப்பு பணி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 6 நபர்களின் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் காவல் நிலையத்தின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றான புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அப்போது அங்கு அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 6 நபர்களின் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதன் பின் அவர்களை இவ்வாறு தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று காவல்துறையினர் எச்சரித்து அனுப்பிவைத்துள்ளனர்.

Categories

Tech |