Categories
தேசிய செய்திகள்

அடிக்கடி கொள்ளை… கழுத்தறுத்து நண்பனை கொன்ற நண்பர்கள்… அதிரடியாக கைது செய்த போலீசார்!

திருப்பதி அருகே பணத்தை பங்கு வைக்கும் போது ஏற்பட்ட தகராறில் நண்பரைக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கணேஷ் (24), சிவா (21), சுப்பையா (20) ஆகிய மூவரும் திருப்பதியை சேர்ந்தவர்கள்.. நண்பர்களான இவர்கள் திருப்பதி பேருந்து நிலையம், கோயிலுக்கு தனியாக நடந்து செல்லும் பக்தர்களை கத்தி முனையில் மிரட்டி நகைகள், பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளையடிப்பதை  வழக்கமாக வைத்துள்ளனர். பின்னர் மூவரும் சேர்ந்து கொள்ளை அடித்ததை பிரித்து மது குடிப்பது மற்றும் மாதுக்களை அனுபவித்து ஜாலியாக இருந்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் தான் கடந்த மாதம் 6 ஆம் தேதி திருப்பதி ரேணிகுண்டா சாலையில் கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிக்கும் போது மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் சிவாவும், சுப்பையாவும் சேர்ந்து கணேஷை கடுமையாக தாக்கி விட்டு கத்தியால் கழுத்தறுத்து கொன்று விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டனர். இந்த சம்பவம் குறித்து திருப்பதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிவா மற்றும் சுப்பையா ஆகிய இருவரும்  பாரதி பஸ் ஸ்டாண்டில் பதுங்கியிருந்தபோது போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

 

Categories

Tech |