Categories
உலக செய்திகள்

வீட்டின் முன் டெலிவரி பார்சல்… “திருடிச்சென்ற பெண்”… நொடியில் மடக்கி பிடித்த போலீஸ்..!!

கனடாவில் ஆன்லைனில் புக் செய்து டெலிவரி செய்யப்பட்ட பார்சல் ஒன்றை திருடி சென்ற பெண்ணை சில நிமிடங்களிலேயே போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கனடாவில் எட்மன்டன் (Edmonton) பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் கதவு மூடப்பட்டிருந்த ஒரு வீட்டின் முன்பகுதிக்கு பேக் மாட்டிக்கொண்டு தலையில் தொப்பி அணிந்தவாறு மெதுவாக  நடந்து வரும் பெண், தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டம் செய்து விட்டு பின் அங்கிருந்த பார்சலை நைசாக எடுத்துச் சென்றுள்ளார்.

Image result for A doorbell security camera captured the brazen thief being arrested just ... a front door in Edmonton, the capital of Canada's Alberta province

ஆனால், அவர் சிறிது தூரம் சென்ற பின் சற்றும் எதிர்பாராத விதமாக 3 கார்களில் விரைந்து வந்த போலீசார், அதிரடியாக அந்த பெண்ணை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

Image result for A doorbell security camera captured the brazen thief being arrested just ... a front door in Edmonton, the capital of Canada's Alberta province

அப்பகுதியில் அப்பகுதியில் கொள்ளை சம்பவம் அரங்கேறி வந்துள்ளது. ஆகவே கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையில் தான் அந்த பெண் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |