Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… டிரைவரை அடித்துக்கொன்ற குடும்பத்தினர்..!!

விசாரணையில் செல்வமோகனுக்கும், கும்பகோணம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் காவல் துறையினர் அந்த கூலித்தொழிலாளியை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், கூலித்தொழிலாளியின் 17 வயது மகளுக்கு செல்வமோகன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், இதன் காரணமாக ஆத்திரமடைந்த கூலித்தொழிலாளி, அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் 5 பேர் கடந்த 1ஆம் தேதி செல்வமோகனை பட்டீஸ்வரம் அருகே இருக்கும் உள்ளிக்கடை என்ற இடத்துக்கு வரவழைத்து கண்டித்துள்ளனர்.

அப்போது நடந்த சண்டையில் சிறுமியின் குடும்பத்தினர் 5 பேர் சேர்ந்து செல்வமோகனை அடித்துக் கொலை செய்து, கை மற்றும் கால்களை கயிற்றால் கட்டி உடலை ஆற்றில் தூக்கி வீசியது அம்பலமானது. இந்த சம்பவம் தொடர்பாக பட்டீஸ்வரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் உட்பட 5 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |