தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்துள்ளனர்..
திரிபுரா மாநிலம் வடக்கு திரிபுரா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது லால் சாரா கிராமம். இந்த கிராமத்திலுள்ள வீட்டில் தனியாக இருந்த தனது மகளிடம் பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை உயர் அலுவலர் ஒருவர், ”வீட்டில் தனியாகயிருந்த தன்னிடம், தனது தந்தை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் அவரின் தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.